யூடியூப்பில் புதிய தொழில்நுட்ப வசதியை கொண்டுவர முயற்சிக்கும் கூகுள் நிறுவனம்

யூடியூப்பில் புதிய தொழில்நுட்ப வசதியை கொண்டுவர முயற்சிக்கும் கூகுள் நிறுவனம்

உலக அளவில் அதிக வீடியோக்களை கொண்டு செயல்படும் மிகப்பெரிய தளமாக யூடியூப் உள்ளது. உலக மக்கள் அனைவரும் வீடியோ பார்க்க உதவும் இந்த யூடியூப் தளம் மூலம் பல்வேறு நிறுவங்கள் தங்களின் சேவைகள் பற்றிய விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன.

அதாவது நாம் வீடியோ பார்க்க ஆரம்பிக்கும் போதும் வீடியோவின் இடையிடையேவும் அவ்வப்போது விளம்பரங்கள் வந்து மறையும் இவ்வாறு நாம் பார்க்கும் அந்த விளம்பரங்களுக்கு அந்த குறிப்பிட்ட நிறுவனம் ஒரு தொகையை கூகுள் நிறுவனத்திற்கு அளிக்கும்.

இவ்வாறு கூகுள் நிறுவனம் பெற்ற தொகையில் பெரும் பகுதியை அந்த வீடியோ பதிவேற்றிய நபருக்கு கொடுக்கும். இது மீடியா பணியில் இருப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த துறையில் உள்ள அனைவரும் யூடியூப் விளம்பரங்கள் மூலம் கணிசமான தொகையை மாதம் மாதம் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கூகுள் நிறுவனம் மேலும் தனது சேவையை விரிவு படுத்தும் நோக்கத்தில் பதிவேற்றப்படும் வீடியோக்களின் கீழே பொருட்களை வாங்குவதற்கான ஈ வணிகத்திற்கான இணைப்பை வழங்கவுள்ளது. இவ்வாறு கொடுக்கப்படும் இணைப்பில் அந்த பொருட்கள் பற்றிய குறிப்புகள் மற்றும் அதன் விலையும் காண்பிக்கவிருக்கிறது.

பார்வையாளர்கள் அங்கு பட்டியலிடப்படும் பொருட்களை வாங்க விரும்பினால் அந்த குறிப்பிட்ட இணைப்பின் மூலம் விற்பனையாளர்களின் இணையதளத்திற்கு செல்ல முடியும். அதன் பிறகு அந்த இணையதளத்தின் மூலம் அப்பொருட்களை சுலபமாக வாங்க முடியும்.

இது மட்டுமில்லாமல் மேலும் 10 வகையான டிஜிட்டல் வியாபார சேவைகளையும் மே 14 ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தவுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.